×

கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் சிஐடி சிறப்பு விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் சிஐடி சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநில தலைவர் நளின் குமார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் சட்ட விரோதமாக தங்களுக்கு வந்த கறுப்பு பணத்தை பிட்காயினின் பதுக்கி வைத்திருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்த குற்றசட்டுக்கு தேர்தல் சமயத்தின் போது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், இது தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தபடும் என அறிக்கை வெளியிடபட்டிருந்தது. இதன் அடிபடையில் ஒரு சிறப்பு ஆணை இன்று கர்நாடக அரசு சார்பில் வெளியிடபட்டது. இந்த ஆணையில், பிட்காயின் ஊழல் தொடர்பாக யார் யார் மீது குற்றசாட்டு உள்ளதோ, அது குறித்து விசாரணை நடத்த ஏடிஜிபு மணீஷ் கப்ரேகர் தலைமையில் 4 பேர் கொண்ட சிஐடி சிறப்பு படையை அமைத்திருப்பதாக அந்த அரசாணையில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் சமயத்தில் வாக்குறுதியாக அளித்திருந்ததன் அடிபடையில், இந்த சிறப்பு படை அமைந்திருப்பதாகவும், ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்களை இந்த சிறப்பு படை வெளிகொண்டுவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் சிஐடி சிறப்பு விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CIT ,Karnataka ,BJP ,BENGALURU ,Karnataka BJP ,Dinakaran ,
× RELATED நில உரிமை சட்டம் குறித்து தவறான...